மாவட்ட செய்திகள்

வளர்ச்சி பணிகளை துணை கலெக்டர் ஆய்வு + "||" + Deputy Collector inspecting development works

வளர்ச்சி பணிகளை துணை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகளை துணை கலெக்டர் ஆய்வு
சாணார்பட்டி பகுதியில் வளர்ச்சி பணிகளை துணை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்: 

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் எமக்கலாபுரம், தவசிமடை, கூவனூத்து ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை துணை கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்தார். அதில் சிமெண்டு சாலை தரம் குறித்தும், ஊராட்சிகளின் பதிவேடுகளையும், தடுப்பணை கட்டும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமுத்து, ஒன்றிய பொறியாளர் பிரிட்டோ மற்றும் அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.