பொது இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்


பொது இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
x
தினத்தந்தி 9 Sept 2021 8:31 PM IST (Updated: 9 Sept 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே பொது இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

வடமதுரை: 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று வடமதுரை அருகே உள்ள புத்தூர் நாடகமேடையில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்தனர்.

 இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அகற்ற வலியுறுத்தினர்.

 இதையடுத்து அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் அந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீஸ் நிலையம் அழைத்து பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story