மாவட்ட செய்திகள்

ஊட்டியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Nurses protest

ஊட்டியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்.
ஊட்டி,

விடுமுறை நாட்களில் செவிலியர்கள் கொரோனா தடுப்பு பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், இரவு 10 மணி வரை வீடு, வீடாக சென்று தடுப்பூசி பணியை மேற்கொண்டு வருவதால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. 

இதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் சாந்தகுமாரி, மாவட்ட தலைவர் தீபகுமாரி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே செவிலியர்களை தடுப்பூசி பணிக்கு அமர்த்த கூடாது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆட்களை நியமிக்க வேண்டும். உடனுக்குடன் அறிக்கையை சமர்ப்பிக்க நிர்பந்திக்கக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.