வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
வாணியம்பாடி
வாணியம்பாடியை அடுத்த மேல்குப்பம், மிட்டாதார் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவர் அங்குள்ள ஏரிக்கரை அருகே உள்ள காளியம்மன் கோவிலுக்கு சாமிகும்பிட சென்றார். அங்கு கோவிலுக்கு வெளியே மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தீயை அணைக்க முயற்சி செய்தார். அதற்குள் மோட்டார்சைக்கிள் முழுவதும் எரிந்து விட்டது.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஜெயவேல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார்சைக்கிளுக்கு யாரும் தீ வைத்தார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story