திருப்பத்தூர் மாவட்டத்தில் 12-ந் தேதி 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு


திருப்பத்தூர் மாவட்டத்தில் 12-ந் தேதி 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
x
தினத்தந்தி 9 Sept 2021 10:31 PM IST (Updated: 9 Sept 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் 12-ந் தேதி நடக்கும் சிறப்பு முகாமில் 70 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 12-ந் தேதி நடக்கும் சிறப்பு முகாமில் 70 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

சிறப்பு முகாம்

மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 500 வாக்குச்்சாவடி மையங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம்களை பொது மக்கள் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேணடும்.

முதலாவது தவணை ஊசிக்கூட செலுத்திக் கொள்ளாமல் 6 லட்சம் நபர்கள் உள்ளனர். இதுவரை நமது மாவட்டத்தில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 353 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.  தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆதாரத்தை கேட்கும்பொழுது சிலர் நான் வேறு ஒரு கைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டேன் என்று கூறுகின்றனர். எனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை வாக்களர்கள் பட்டியலின் அடிப்படையில் சரிபார்க்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

70 ஆயிரம் பேருக்கு

12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முகாமில் 70 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயன், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன், சுகாதாரபணிகள் துணை இயககுனர் செந்தில், அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story