மாவட்ட செய்திகள்

செல்போனில் ஆடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை + "||" + Adolescent commits suicide by posting audio on cell phone

செல்போனில் ஆடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை

செல்போனில் ஆடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை
சாவுக்கு மனைவி, மாமியார்தான் காரணம் என்று செல்போனில் ஆடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள பள்ளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் விநாயகமூர்த்தி(வயது 25). இவருக்கும், சாரத்தை சேர்ந்த இந்துமதி(22) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவர், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி தனது குழந்தையை பார்க்ளக விநாயகமூர்த்தி சென்றார். ஆனால் இந்துமதி, குழந்தையை காட்டவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விநாயகமூர்த்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  இது பற்றி தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் விநாயகமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கு தனது மனைவியும், மாமியாரும்தான் காரணம் என்று என்று அவர் தனது செல்போனில் ஆடியோவாக பதிவிட்டு இருந்தார். இது குறித்து  ஏழுமலை கொடுத்த புகாரில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.