திருவண்ணாமலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் போராட்டம்
போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் போராட்டம்
திருவண்ணாமலை
முகூர்த்த நாட்கள் நேற்று முன்தினம் முதல் இன்று வரை என தொடர்ந்து 3 நாட்கள் உள்ளது. இதனால் பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் பலர் காத்திருந்தனர்.
அங்கிருந்து அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு, பெரணமல்லூர், வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளுக்கு இரவு சுமார் 11 மணியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் போதிய பஸ் வசதி இல்லாததால் திடீரென பஸ்நிலையத்தில் பஸ்கள் செல்லும் வழிதடத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் மற்றும் போக்குவரத்து துறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அவர்களுக்கு பஸ் வசதி செய்யப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story