போலீஸ் வேன்-லாரி மோதல்


போலீஸ் வேன்-லாரி மோதல்
x
தினத்தந்தி 9 Sep 2021 5:36 PM GMT (Updated: 2021-09-09T23:06:02+05:30)

சிலை கடத்தல் வழக்கில் கைதானவர்களுடன் வந்த போலீஸ் வேன்-லாரி மீது மோதியது. கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்றபோது விபத்து நிகழ்ந்தது.

விக்கிரவாண்டி, 

சிலை கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பெருமாள் கோவிலை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(வயது 47), செங்கல்பட்டை சேர்ந்த விக்ரம்(28), இளந்தோப்பை சேர்ந்த சதீஷ்குமார்(29) ஆகிய 3 பேர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவற்காக தலைமை காவலர் சோமநாதன், போலீஸ்காரர்கள் இளையராஜா, தியாகு, மாதேஸ் ஆகியோர் கும்பகோணத்திற்கு வேனில் அழைத்துச்சென்றனர். வேனை ஜெயப்பிரகாஷ் என்பவர் ஓட்டினார். 
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி போலீஸ் நிலையம் எதிரே நேற்று காலை 8.30 மணி அளவில் வந்தபோது முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் போலீஸ் வேன், அந்த லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனின் முன்பகுதி சேதமானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வேனில் வந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து மாற்று வாகனத்தில் 3 பேரையும் போலீசார் கும்பகோணம் கோர்ட்டிற்கு அழைத்துச்சென்றனர். இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story