மினிவேன் மோதி கொத்தனார் பலி
மினிவேன் மோதி கொத்தனார் பலியானார்.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ளது கோட்டைப்பூவந்தி பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மூத்த மகன் பழனிவேல் (வயது35). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் தந்தையை பார்க்க மோட்டார் சைக்கிளில் சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். அப்போது மினி வேன் மோதியதில் பழனிவேலுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழனிவேலுவின் தம்பி சுப்பிரமணியன் பூவந்தி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் சரிதாபாலு வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story