மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி,
காட்டுப் பரமக்குடி இந்திர குல வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது70). இவர் முத்துவயல் கிராமத் தில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக செல்வ தற்கு பரமக்குடி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை பிடித்து இழுத்துள்ளார். உடனே புஷ்பவள்ளி கழுத்தை பார்த்தபோது கழுத்தில் வேறு ஜெயின் இருந்ததால் இரண்டு செய்யணும் உள்ளது என நினைத்து பஸ்சில் ஏறி அமர்ந்துள்ளார். அந்த பஸ் அரியனேந்தல் அருகே சென்றபொழுது புஷ்பவள்ளி கழுத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை மட்டும் காணவில்லை. உடனே அவர் பஸ்சில் இருந்து அங்கேயே இறங்கி அவரது மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்பு மகனுடன் வந்து பரமக்குடி பஸ் நிலையத்தில் பார்த்த போது செயின் இல்லை. உடனே புஷ்பவள்ளி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story