மூலக்கரை முனியப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்


மூலக்கரை முனியப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 9 Sep 2021 5:43 PM GMT (Updated: 2021-09-09T23:13:57+05:30)

மூலக்கரை முனியப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் தாளையடி கோட்டை கிராமத்தில் உள்ள அம்பலகாரர்களுக்கு பாத்தியப் பட்ட மூலக்கரை முனியப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கருடன் வானத்தில் வட்டமிட்டபடி சாமியை சுற்றிவரும்போது கும்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப் பட்டது. விழா முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story