லாரி மோதி இறந்த பெல் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு
லாரி மோதி இறந்த பெல் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராணிப்பேட்டை
லாரி மோதி இறந்த பெல் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லாரி மோதி பெல் ஊழியர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் உதயம் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). பெல் ஊழியர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி, ராணிப்பேட்டையில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை ஆட்டோ நகர் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு
மேலும் வெங்கடேசனின் மனைவி ரமணி மற்றும் அவரது மகன், மகள்கள் ஆ௳ியோர் நஷ்டஈடு கேட்டு ராணிப்பேட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் அண்ணாதுரை ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் ராணிப்பேட்டையில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், ராணிப்பேட்டை கூடுதல் அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிபதி ரேவதி ஆகியோர், விபத்தில் இறந்த வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.
மனுதாரரின் வக்கீல் அண்ணாதுரை, இன்சூரன்ஸ் நிறுவன வக்கீல் துளசிமணி செல்வம் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story