ராணிப்பேட்டை மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2021 11:38 PM IST (Updated: 9 Sept 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசுகையில், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி 760 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே முதல் தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக நினைவூட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். 
கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story