ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 650 போலீசார்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 650 போலீசார்
x
தினத்தந்தி 9 Sept 2021 11:43 PM IST (Updated: 9 Sept 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 650 போலீசார்

ராணிப்பேட்டை

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதை தடுக்கும் வகையில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.

அதன்படி ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் 10 போலீஸ் ஜீப்கள், 55 மோட்டார் சைக்கிள்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். 17 இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் 104 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

Next Story