சித்தன்னவாசல் மலை மீது மது போதையில் படுத்திருந்தவர் மீட்பு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்
சித்தன்னவாசல் மலை மீது மது போதையில் படுத்திருந்தவர் மீட்கப்பட்டார்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் உச்சி மலையில் ஆபத்தான பகுதிகளில் ஒருவர் படுத்திருப்பதாக சித்தன்னவாசல் காவல் பணியாளர்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் உத்தரவின் பேரில் போலீஸ் கோகுல் உள்ளிட்ட சித்தன்னவாசல் பாதுகாவலர்கள் சிலர் சித்தன்னவாசல் மலையின் உச்சிக்கு சென்று பார்த்தபோது ஆபத்தான பகுதியில் குடிபோதையில் படுத்திருந்த வாலிபரை போலீசார் மீட்டு விசாரணை செய்தபோது அவர் சித்தன்னவாசல் பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 45) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை மலையில் இருந்து கீழே இறக்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி பின்னர் அவரது உறவினர்களிடம் அனுப்பி வைத்தனர். இதனால் சித்தன்னவாசல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story