கோவிலில் வெள்ளி சிலை, தங்கத்தாலி திருட்டு
கோவிலில் வெள்ளி சிலை, தங்கத்தாலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
உடையார்பாளையம்:
பூட்டு உடைப்பு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி பகுதியில் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை அப்பகுதியில் உள்ளவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான தமிழரசன்(வயது 51) நேற்று முன்தினம் அந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருட்டு
பின்னர் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது வெள்ளி நாக சிலை, வெள்ளிவேல் மற்றும் தங்கத்தாலி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் தமிழரசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிந்து கோவிலில் சிலை மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story