2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Sept 2021 1:39 AM IST (Updated: 10 Sept 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி ரோடு ஏரிக்கரையின் ஒரு பகுதியில் நேற்று காலை 2 குழந்தை திருமணங்கள் நடைபெறவுள்ளதாக நேற்று முன்தினம் இரவே சைல்டு லைனுக்கும், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெரம்பலூர் சைல்டு லைனை சேர்ந்த திவ்யா, முருகானந்தம், சாரதா மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, ஏட்டு பார்வதி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமணம் நடைபெற இருந்த 17 வயதுடைய 2 சிறுமிகளை மீட்டு உடனடியாக காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அந்த சிறுமிகளுக்கு நேற்று நடைபெறவிருந்த திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும் போலீசார் சிறுமிகளுக்கு திருமணம் செய்ய இருந்தவர்களையும், சிறுமிகளின் பெற்றோர்களையும் எச்சரித்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் சைல் லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், பொது இடங்கள் மற்றும் குடும்பத்தில் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த புகாருக்கு 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்றனர்.

Next Story