மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு + "||" + Case filed against couple who attacked woman and threatened to kill her

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு கிராமம் மேலத் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி அமுதா(வயது 36). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன், அவரது மனைவி தேவி ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அமுதா வீட்டில் இருந்தபோது மாரியப்பனும், தேவியும் சேர்ந்து அமுதாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த அமுதா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் மாரியப்பன், தேவி ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இரட்டைமடி வலையை பயன்படுத்திமீன் பிடித்த விசைப்படகுகள் மீது வழக்கு
இரட்டைமடி வலையை பயன்படுத்திமீன் பிடித்த விசைப்படகுகள் மீது வழக்கு செய்யப்பட்டது.
2. வரதட்சணை கேட்டு பெண்ணை மிரட்டியதாக 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராஜபாளையம் அருகே வரதட்சணை கேட்டு மிரட்டியதாக 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
3. பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவரை தாக்கியவர் மீது வழக்கு
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. ஆயுள்தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வழக்கு
ஆயுள்தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வழக்கில் சிறை அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
5. 679 பேர் மீது வழக்குப்பதிவு
போக்குவரத்து விதிகளை மீறிய 679 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.