அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்


அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
x
தினத்தந்தி 10 Sept 2021 1:44 AM IST (Updated: 10 Sept 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

வரதராஜன்பேட்டை:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திருக்களப்பூர் சாவடி தெருவில் சிலர் பந்தல் அமைத்து, அதில் விநாயகர் சிலை ஒன்றை வைத்துள்ளனர். இதுகுறித்து ஆண்டிமடம் வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை தாசில்தார் முத்துகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் ராமபாலன், கிராம நிர்வாக அலுவலர் மீனா ஆகியோர் கைப்பற்றி ஆண்டிமடம் மேலஅகத்தீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைத்தனர். அந்த சிலை இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்து முன்னணி வட்டார தலைவர் மனோகரன், திருக்களப்பூர் கிராமத்தில் தங்கள் அமைப்புக்கு கிளை இல்லை என்றும், பொதுமக்களில் சிலர் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டினை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story