விலைவாசி உயர்வை கண்டித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விலைவாசி உயர்வை கண்டித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 8:14 PM GMT (Updated: 2021-09-10T01:44:49+05:30)

விலைவாசி உயர்வை கண்டித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

புதுச்சேரி, செப்.10-
அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரதிய மஸ்தூர் சங்க தலைவர் ஆசைதம்பி தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் பிரகாஷ், துணை தலைவர் நந்தகுமார், துணை செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், ராமச்சந்திரன், உதயக்குமார், வேலு, கணேசன், அருண்குமார், மாரியப்பன், பாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story