தாசில்தார் அலுவலகத்தை மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகை


தாசில்தார் அலுவலகத்தை மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Sept 2021 1:44 AM IST (Updated: 10 Sept 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை தாசில்தார் அலுவலகத்தை மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் செந்துறை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் செந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட தளவாய், சேந்தமங்கலம், சிலுப்பனூர் பகுதிகளில் உள்ள வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story