மாவட்ட செய்திகள்

4-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம் + "||" + Teacher training student-students struggle on the 4th day

4-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்

4-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்
4-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாரை சேர்ந்த ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடக்க கல்வி பட்டய தேர்வினை ஆன்லைன் வழியாக நடத்தவும், தேர்வுக்கான மதிப்பெண் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்யவும் தமிழக அரசை வலியுறுத்தி கடந்த 6-ந்தேதி முதல் தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளான நேற்றும் தேர்வு எழுத வந்திருந்த முதலாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான தமிழ் கற்பித்தல் தேர்வு நடந்தது. தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த 4 மாணவர்கள் உள்பட மொத்தம் 81 பேரில், 3 ஆண்கள் உள்பட மொத்தம் 43 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 38 பேரில் பலர் தேர்வு எழுத மையத்திற்கு வரவில்லை. தேர்வை புறக்கணித்து மையம் முன்பு ஒருசிலரே போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கறம்பக்குடியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. 3-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்
தேர்வை புறக்கணித்து 3-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் போராட்டம்
தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
4. தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
5. தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம்
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம்