மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய தொழிலாளிக்கு ஒரு ஆண்டு ஜெயில்


மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய தொழிலாளிக்கு ஒரு ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 10 Sept 2021 1:50 AM IST (Updated: 10 Sept 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளிக்கு ஒரு ஆண்டு ஜெயில்

நெல்லை:
நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 37). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (35). இந்த நிலையில் சின்னத்துரை மற்றும் குடும்பத்தினர் பேச்சியம்மாளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். 
இதுகுறித்து பேச்சியம்மாள் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 
இந்த வழக்கை நேற்று விசாரித்த நெல்லை கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி ராஜேஷ்குமார், சின்னத்துரைக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 
மேலும் ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும், பேச்சியம்மாளுக்கு சொந்தமான 20 பவுன்  நகைகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.

Next Story