பூக்கள் விலை உயர்வு
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
விருதுநகர்,
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி
விருதுநகர் பூ மார்க்கெட்டில் கடந்த 3 தினங்களாக முகூர்த்த தினங்களாக இருந்ததால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதிலும் இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி தினமாக உள்ளதால் நேற்று பூக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மல்லிகைப் பூ. பிச்சிப்பூ, முல்லைப்பூ ஆகியவை கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
செவ்வந்திப்பூ, ரோஜாஆகியவை கிலோ ரூ.400 ஆகவும், கனகாம்பரம் கிலோ ரூ.2,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
வரத்து குறைவு
இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில்,
பூ வரத்து குறைவு, விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும். இருப்பினும் கடந்த காலங்களை போல் விநாயகர் சதுர்த்திக்கு பூக்கடைகளில் கூட்டம் அதிகமாக இல்லை. விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள இடங்களில் வழக்கமான கூட்டம் இல்லை.
வழக்கமாக விநாயகர் சதுர்த்திக்கு முன்தினம் வீடுகளில் சிலை வைத்து வழிபடுவதற்காக விநாயகர் சிலை விற்பனை பரபரப்பாக இருக்கும். ஆனால் நேற்று விநாயகர் சிலை விற்பனை விருதுநகரில் மந்தமாகவே இருந்தது.
Related Tags :
Next Story