தென்காசி மாவட்டத்தில், நாளை மறுநாள் 614 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


தென்காசி மாவட்டத்தில், நாளை மறுநாள் 614 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 9 Sep 2021 8:24 PM GMT (Updated: 9 Sep 2021 8:24 PM GMT)

614 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் 614 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு முகாம்
தமிழக அரசின் உத்தரவின்படி, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம, நகர மற்றும் நகராட்சி பகுதிகளில் கொரோனா 3-ம் அலையை தடுக்கும் வகையில் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள் என மொத்தம் 614 மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
அமைச்சர் பங்கேற்பு
இந்த முகாம்களில் சுமார் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம், ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புளியங்குடி ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story