வீட்டில் இருந்த14 பவுன் நகை மாயம்


வீட்டில் இருந்த14 பவுன் நகை மாயம்
x
தினத்தந்தி 10 Sept 2021 1:59 AM IST (Updated: 10 Sept 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

நகை மாயம்

மானூர்:
மானூர் அருகே வீட்டில் இருந்த 14 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுமாப்பிள்ளை
மானூர் அருகே ராமையன்பட்டி சங்கு  முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் நெல்லை பாலபாக்யா நகரில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சம்பவத்தன்று சதீஷ்குமார் தனது திருமண ஆல்பத்தில் மேலும் சில புகைப்படங்களை சேர்க்க திட்டமிட்டார். இதற்காக புகைப்படம் எடுக்க வசதியாக வீட்டில் உள்ள பீரோவை மற்றொரு அறைக்கு  நகர்த்தி வைக்க ஏற்பாடு செய்தனர்.
14 பவுன் நகை மாயம்
அதன்படி சதீஷ்குமாரும், அவரது கடையில் பணியாற்றும் ஊழியரும் சேர்ந்து, வீட்டில் உள்ள பீரோவை தூக்கி மற்றொரு அறைக்கு நகர்த்தி வைத்தனர். முன்னதாக சதீஷ்குமாரின் மனைவி கிறிஸ்டி, பீரோவில் இருந்த 39 பவுன் நகைகளை இரு பைகளில் வெளியே எடுத்து வைத்து இருந்தார். பின்னர் கிறிஸ்டி புகைப்படம் எடுப்பதற்காக நகைகளை அணிவதற்காக, அவற்றை தேடியபோது 14 பவுன் நகைகள் இருந்த பை மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story