வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை-பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
முசிறி
முசிறி அருகே அய்யம்பாளையம் முருகன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சசிகலா (வயது 49). இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவையும் உடைத்த மர்ம நபர்கள் அதில் வைக்கப்பட்டு இருந்த 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து முசிறி போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story