வேனில் டீசல் திருடிய 3 வாலிபர்கள் கைது


வேனில் டீசல் திருடிய 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 9 Sep 2021 8:34 PM GMT (Updated: 2021-09-10T02:04:01+05:30)

வேனில் டீசல் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

முசிறி
முசிறி அருகே உள்ள சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் கரூரில் உள்ள டெக்ஸ்டைல் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் முசிறி அருகே அய்யம்பாளையம் பகுதியில் இருந்து தினமும் எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை வேனில் அழைத்து செல்வதும், பின்னர் வேலை முடிந்து அங்கிருந்து அவர்களை அழைத்து வருவதும் வழக்கம். வழக்கம்போல அய்யம்பாளையம் பகுதியில் தொழிலாளர்களை இறக்கி விட்டு அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் வேனை நிறுத்தியிருந்தார். சம்பவத்தன்று இரவு நிறுத்தியிருந்த வேனில் இருந்து பிளாஸ்டிக் குழாய் மூலம் டீசலை மர்ம நபர்கள் சிலர் திருடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து சண்முகம் கூச்சலிடவே, மர்ம நபர்கள் டீசல் கேன், குழாய் ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து முசிறி போலீசில் சண்முகம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆறுமுகம் (28), ராம்குமார் (25), விக்னேஷ் (21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story