மாவட்ட செய்திகள்

ஜவுளிக்கடையில் நூதன முறையில் திருட முயன்ற வாலிபர் சிக்கினார் + "||" + The young man was caught trying to steal in a modern way in a textile shop

ஜவுளிக்கடையில் நூதன முறையில் திருட முயன்ற வாலிபர் சிக்கினார்

ஜவுளிக்கடையில் நூதன முறையில் திருட முயன்ற வாலிபர் சிக்கினார்
ஜவுளிக்கடையில் நூதன முறையில் திருட முயன்ற வாலிபர் சிக்கினார்
திசையன்விளை:
திசையன்விளை மெயின் பஜாரில் உள்ள ஜவுளிக்கடையில் துணி வாங்குவதாக சென்ற வாலிபர் ஏராளமான துணிகளை தேர்வு செய்தார். பின்னர் அவற்றை அணிந்து பார்க்க வேண்டும் என்று கூறி, அங்குள்ள அறைக்கு சென்றார். பின்னர் அவர் துணிகளை வாங்கவில்லை என்று கூறி திரும்பி செல்ல முயன்றார்.
அப்போது அங்கு சில துணிகள் குறைந்ததால், அந்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் ஒன்றன்மேல் ஒன்றாக சில சட்டைகளையும், உள்ளாடைக்குள் மறைவாக சில ஆடைகளையும் மறைத்து வைத்து திருடிச்செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரிடம் இருந்து துணிகளை மீட்ட ஊழியர்கள், அந்த வாலிபருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது