மது விற்ற 32 பேர் கைது


மது விற்ற 32 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sep 2021 8:39 PM GMT (Updated: 2021-09-10T02:09:40+05:30)

மது விற்ற 32 பேர் கைது

நெல்லை :
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 208 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

Next Story