புலி தாக்கி வாலிபர் சாவு


புலி தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 10 Sept 2021 2:14 AM IST (Updated: 10 Sept 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

உன்சூர் அருகே புலி தாக்கி வாலிபர் உயிரிழந்துள்ளார். அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மைசூரு: உன்சூர் அருகே புலி தாக்கி வாலிபர் உயிரிழந்துள்ளார். அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதிக்கு சென்றார்

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா அனகோடு ஓபளி  ஐயனகெரே கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் ஜயனகெரே மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் சிறுத்தை, புலி அட்டகாசம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஐயனகெரே கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் (வயது 24). 

நேற்றுமுன்தினம் காலை கணேஷ், இயற்கை உபாதை கழிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் வனப்பகுதியில் புலி ஒன்று நடமாடி கொண்டிருந்தது. அப்போது ரமேசை கண்டதும் புலி, அவரை தாக்க புதருக்குள் பதுங்கி நின்றது. இதை அறியாமல் கணேஷ் நடந்து சென்றுள்ளார். 

புலி அடித்து கொன்றது

இதையடுத்து புதரில் மறைந்திருந்த புலி திடீரென்று கணேஷ் மீது பாய்ந்து கடித்து குதற தொடங்கியது. இதனால் அவர் காப்பாற்றும்படி... கூச்சலிட்டார். மேலும் புலியிடமும் இருந்து தப்பிக்க தொடர்ந்து முயன்றார். ஆனாலும் புலி, கணேசை கடித்து கொன்றது. பின்னர் புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதற்கிடையே வனப்பகுதிக்கு சென்ற, கணேஷ் திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கிராம மக்கள் வனப்பகுதிக்கு சென்று பார்த்தனர். 

அப்போது அவர்கள் வனப்பகுதியில் ரத்த காயங்களுடன் ரமேஷ் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் உடல் அருகே புலி கால்தடம் இருந்தது. அப்போது தான் புலி தாக்கி கணேஷ் உயிரிழந்ததை உறவினர்கள், கிராம மக்கள் உணர்ந்தனர். கணேசின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி வனத்துறையினருக்கும், உன்சூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. 

கிராம மக்கள் கோரிக்கை

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர், போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கணேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் ஆடு, மாடுகளை கடித்து இறுதியில் மனிதர்கள் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. 

புலிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், மேலும் புலி தாக்கி பலியான கணேசின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். புலி தாக்கி வாலிபர் பலியான சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story