நெல்லையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை பூக்கள் விலையும் உயர்ந்தது


நெல்லையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை பூக்கள் விலையும் உயர்ந்தது
x
தினத்தந்தி 9 Sep 2021 8:50 PM GMT (Updated: 2021-09-10T02:20:41+05:30)

நெல்லையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை பூக்கள் விலையும் உயர்ந்தது

நெல்லை:
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறிய அளவிலான சிலைகள் அதிகளவு விற்பனை ஆனது. பூக்களின் விலையும் உயர்ந்தது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், நீர் நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பெரிய விநாயகர் சிலைகள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கின்றன. நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் வடமாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களிடம் பொது மக்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை மட்டுமே வாங்கிச்செல்கிறார்கள். அந்த சிலைகளை வீட்டில் வைத்து பூஜை நடத்த கொண்டு சென்றனர்.
பூக்கள் விலை உயர்வு
விநாயகர் சதுர்த்தி பூஜை, வழிபாட்டுக்கு பூக்கள் அதிகளவு விற்பனை ஆனது. மேலும் ஆவணி மாத முகூர்த்த நாட்களையொட்டி ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 
இதனால் நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.800-க்கும், பிச்சிப்பூ ரூ.700-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும் விற்பனை ஆனது. 
இதுதவிர சம்பங்கி ரூ.300, கேந்தி -ரூ.30, கோழிக்கொண்டை -ரூ.60, ரோஸ் -ரூ.300 என அனைத்து வகையான பூக்களும் விலை உயர்ந்து விற்பனை ஆனது. பொதுமக்கள், வியாபாரிகள் போட்டி போட்டு அவற்றை வாங்கிச்சென்றனர்.
மேலும் மார்க்கெட்டிலும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
.

Next Story