ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தத்தை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என வலியுறுத்தியும், 11 சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய, மாநில அரசுகள் உடனே வழங்க வலியுறுத்தியும், போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எம்.எஸ். தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் குருசாமி தலைமையிலும், மாவட்ட துணைத்தலைவர் காசிராஜன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட உடலுழைப்பு தொழிலாளர் சங்க செயலாளர் ரத்தினசபாபதி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் போத்திராஜ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்க பேரவை செயலாளர் நாராயணசாமி, மின்வாரிய தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் ராஜ்மோகன், பி.எம்.எஸ். மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மாவட்ட செயலாளர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story