வீட்டில் பட்டாசு தயாரித்த 3 பேர் கைது


வீட்டில் பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sept 2021 2:45 AM IST (Updated: 10 Sept 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணியில் அனுமதியின்றி பட்டாசு தொழில் நடைபெற்று வருவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜெயராணி (வயது 36), மகேஷ்குமார் (37), ஜெயராஜ் (58) 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 30 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர். 

Next Story