ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 9:22 PM GMT (Updated: 2021-09-10T02:52:55+05:30)

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி:
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சலீம் முகம்மது மீரான்,  ஜே.சி.டி.யு. செயலாளர் மாரியப்பன், போக்குவரத்து ஓய்வூதியர் நலச்சங்க மாவட்ட இணை செயலாளர் மாணிக்கம், தமிழ் மாநில விரைவு போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் தர்மராஜன், எஸ்.இ.டி.சி. ஓய்வூதியர் சங்கம் அருணாசலம், ஊரக வளர்ச்சி அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கருப்பையா, ஓய்வுபெற்ற மருத்துவர்கள் சங்கம் டாக்டர் அப்துல் அஜீஸ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரை சிங், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story