மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளுக்கு செல்ல புதிய பாதை திறப்பு + "||" + New lane opening for runways at Chennai Airport

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளுக்கு செல்ல புதிய பாதை திறப்பு

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளுக்கு செல்ல புதிய பாதை திறப்பு
சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளுக்கு செல்ல புதிய பாதை திறப்பு.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகளுக்காகவும், பயணிகளின் வசதிக்காவும் விரிவாக்க பணிகள் செய்யப்பட்டு வருகிறது. விமான சேவைகள் விரைவாக இருக்க ஓடுபாதைகள் அருகே விமான நடைமேடைகள் அமைக்கப்பட்டன. இந்த நடைமேடைகளில் இருந்து ஓடுபாதைக்கு விமானங்கள் விரைவாக செல்லக்கூடிய வகையில் புதிதாக பாதை அமைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளுக்கு நடுவே 1970 மீட்டர் நீளத்திலும், 25 மீட்டர் அகலத்திலும் இந்த பாதை அமைக்கப்பட்டது.


இந்த பாதை மூலமாக விமானங்கள் விரைவாக நடைமேடைக்கும், ஓடுபாதைக்கும் வந்து செல்ல முடியும். இதனால் ஓடுபாதைக்கு செல்லக் கூடிய விமான போக்குவரத்து நேரம் குறையும். புதிதாக அமைக்கப்பட்ட பாதை நேற்று விமான போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்த பாதையில் முதல் முறையாக வந்த விமானத்துக்கு இருபக்கமும் நின்று தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணி - கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை 2 ஆயிரம் பணியாளர்கள் கொண்டு தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
2. கங்கோத்ரி கோவில் மே 3ம் தேதி திறக்கப்படுவதாக அறிவிப்பு..!!
இமயமலையில் அமைந்துள்ள கங்கோத்ரி கோவில் நடை மே 3ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3. தோனி விவசாய பண்ணையை பொது மக்கள் பார்வையிட 3 நாட்களுக்கு திறப்பு
ஹோலியை முன்னிட்டு தோனியின் விவசாய பண்ணை 3 நாட்களுக்கு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டு உள்ளன.
4. டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்களே தடுக்கலாம்..! தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம்
புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.
5. ஸ்ரீராமானுஜருக்கு அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி
சமத்துவத்திற்கான சிலை என அழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் சிலை நாட்டிலேயே 2-ஆவது பெரிய சிலை என்ற பெருமையை அடைகிறது.