புதுச்சேரி தொல்பொருள் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் தொல்பொருள் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, செப்.10-
புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணாநகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய தொல்பொருள் அலுவலகம் உள்ளது. இங்கு ஆய்வுத்துறை உதவியாளராக ரவிச்சந்திரன் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அரியாங்குப்பம் சோழபுரம் திருப்பூர் குமரன் வீதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் அங்கு வந்து, ரவிச்சந்திரனையும், உயர் அதிகாரிகள், ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் அலுவலகத்தை வெடிகுண்டு வீசி அழித்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ரவிச்சந்திரன் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story