தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை சொந்த ஊர் செல்ல அலைமோதிய கூட்டம்


தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை  சொந்த ஊர் செல்ல அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2021 6:28 AM GMT (Updated: 10 Sep 2021 6:55 AM GMT)

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் 1.29 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை

விநாயகர் சதுர்த்தி வார இறுதி நாட்கள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதேபோல் சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலும், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அதிக அளவில் கூடியதால் அங்கு கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் 1.29 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சிறப்பு பஸ்கள் என 2,642 பேருந்துகள் இயக்கப்பட்டு நிலையில் 1.29 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

இதற்கிடையில், பெரும்பாலனவர்கள் முன்பதிவு செய்ததால் நேரடியாக பஸ்  நிலையங்களுக்கு வந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டதால் பேருந்துகள் நிரம்பி வழிந்தன. கொரோனா காலத்தில் இது போன்று கூட்ட நெரிசலில் பயணிப்பது பரவலை அதிகப்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிந்துள்ளனர்.



Next Story