திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்க்கான 2-ம் கட்ட கலந்தாய்வு


திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்க்கான 2-ம் கட்ட கலந்தாய்வு
x
தினத்தந்தி 10 Sep 2021 11:58 AM GMT (Updated: 2021-09-10T17:28:33+05:30)

மாணவர் சேர்க்கைக்க்கான 2-ம் கட்ட கலந்தாய்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டின் இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வும், முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது. இளங்கலையில் கலைப்பிரிவுக்கு வருகிற 13, 14 மற்றும் 17, 18-ந் தேதியும், அறிவியல்பிரிவுக்கு 15-ந் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 

16-ந் தேதி முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன சுழற்சி முறையில், மதிப்பெண் தர வரிசை அடிப்படையில் நடைபெறும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மூலச் சான்றிதழ்கள், அவற்றின் இரு நகல்களுடன் மாணவரின் புகைப்படம் இரண்டு மற்றும் சேர்க்கை கட்டணம் கொண்டு வர வேண்டும். 
இந்த தகவலை திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story