மாவட்ட செய்திகள்

கயத்தாறு அருகேவிபத்தில் ஆட்டோ டிரைவர் பலி + "||" + auto driver killed in accident near kayatharu

கயத்தாறு அருகேவிபத்தில் ஆட்டோ டிரைவர் பலி

கயத்தாறு அருகேவிபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
கயத்தாறு அருகே நடந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார்
கயத்தாறு:
கயத்தாறு அருகே நடந்த விபத்தில் ஆட்டோ டிரவைர் பரிதாபமாக இறந்தார்.
ஆட்டோ டிரைவர்
கயத்தாறு அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 48). ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள நாற்கர சாலையோரம் உள்ள ஓட்டலில் சாப்பாடு் வாங்கினார். பின்னர் ஓட்டலில் இருந்து தனது வீட்டுக்கு நாற்கர சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுடலைமுத்து மீது அந்த வழியாக சென்ற வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.
பரிதாப சாவு
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சுடலைமுத்து மீது பின்னால் வந்த ஆம்னி பஸ்சும் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுடலைமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுடலைமுத்துவுக்கு சந்தனமாரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.