சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்து ஆலோசனை
சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்குறித்து ஆலோசனா கூட்டம் நடந்தது
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொகுதி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அண்டனி மைக்கேல் தலைமை வகித்து ஆலோசனைகள் வழங்கினார். ஒன்றிய ஆணையர் பாண்டியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், மாசானம், பட்டாத்தி உள்ளிட்ட ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story