மத்திய மந்திரிகள் நாளை எ்ட்டயபுரம் வருகை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு


மத்திய மந்திரிகள் நாளை எ்ட்டயபுரம் வருகை,  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு
x
தினத்தந்தி 10 Sep 2021 2:16 PM GMT (Updated: 10 Sep 2021 2:16 PM GMT)

எட்டயபுரத்திற்கு நாளை மத்திய மந்திரிகள் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆ்ய்வு நடத்தினார்

எட்டயபுரம்:
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது இதனையொட்டி எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இந் நிலையில் பாரதியின் திருவுருவச்சிலைக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நாளை தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம்  நிர்மலா சீதாராமன் மதுரை வருகிறார். அங்கிருந்து காலை 8 மணிக்கு கார் மூலம் தூத்துக்குடி வருகிறார்.  காலை 10 மணிக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து எட்டயபுரம் பாரதியார் மண்டபத்திற்கு சென்று அங்கு நடைபெறும் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் பாரதியின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து புகைப்பட கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார். பாரதியார் மற்றும் வ. உ. சி யின் நூல்களை வெளியிடுகிறார். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகைதரும் மத்திய மந்திரிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அவருடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது, சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், முருகன், மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story