தூத்துக்குடி அருகே விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த பொதுமக்கள்


தூத்துக்குடி அருகே விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 Sep 2021 2:24 PM GMT (Updated: 2021-09-10T19:54:40+05:30)

தூத்துக்குடி அருகே விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கடலில் கரைத்தனர்

ஸ்பிக்நகர்:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவோ, ஊர்வலம் செல்லவோ தடை விதித்திருந்த நிலையில் வீடுகளில் வழக்கமான உற்சாகத்துடனேயே மக்கள் கொண்டாடினர். வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலைகளை ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். விநாயகருக்கு படையல் வைக்கும் உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கு தேவையானவற்றை வாங்குவதற்கு சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அருகம்புல், எருக்கம் பூக்கள் என விநாயகருக்கு உகந்தவையாக கருதப்படும் பொருட்களுக்கு சந்தைகளில் வழக்கமான வரவேற்பு காணப்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியில் வீடுகளில் வைத்து வழிபட்ட 6 விநாயகர் சிலைகள், சுபாஷ் நகர் பகுதியில் 2 சிலைகள், பாரதி நகரில் ஒரு விநாயகர் சிலை ஆக மொத்தம் 9 சிலைகளை குடும்பத்தினர் நேற்று மாலை தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகை பகுதியில் உள்ள கடற்கரையில் கரைத்தனர்.

Next Story