கோபால்பட்டியில் பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி


கோபால்பட்டியில் பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி
x
தினத்தந்தி 10 Sep 2021 4:07 PM GMT (Updated: 2021-09-10T21:37:55+05:30)

கோபால்பட்டியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிற்பதால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோபால்பட்டி:
திண்டுக்கல்-நத்தம் சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக கோபால்பட்டியில் சாலையின் இருபுறமும் கான்கிரீட் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணி கடந்த ஓராண்டாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. 
இதற்கிடையே கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வீடுகளின் முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன்பிறகு அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். 
எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story