தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி செய்வது அதிகரிப்பு
நெகமம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி செய்வது அதிகரித்து உள்ளது.
நெகமம்
நெகமம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி செய்வது அதிகரித்து உள்ளது.
தென்னை சாகுபடி
நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளது. தென்னந்தோப்புகளில் 40 நாட்களுககு ஒருமுறை தேங்காய் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இதில் கோடைகாலத்தில் அதிகம் வரத்து இருக்கும் என்பதால் தேங்காய்க்கு விலை அதிக விலை கிடைக்காது. அதுபோன்று விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் தேங்காய் வரத்து குறைவாக இருக்கும்.
ஊடுபயிராக மஞ்சள்
எனவே தென்னை சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் அவற்றுக்குள் ஊடுபயிராக மஞ்சளை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதி களில் இருக்கும் விவசாயிகள் ஊடுபயிராக மஞ்சள், கோகோ, ஜாதிக்காய், வாழை மற்றும் பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சோதனை அடிப்படை
தென்னை நீண்டகாலம் பலன் தரும் பயிர் ஆகும். இதனுள் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காது. இதன் காரணமாக காய் கறி பயிர் சாகுபடி செய்வதில் சவாலாக இருக்கிறது. இருந்த போதிலும் வெண்டை, தக்காளி, மிளகாய், கத்தரி ஆகிய காய்கறிகளை சாகுபடி செய்து உள்ளோம்.
நிழலில் செடிகள் உயரமாக வளரும். ஆனால் அதில் காய்ப்பு திறன் மிகவும் குறைவாகதான் இருக்கும். இருந்தபோதிலும் சோதனை அடிப்படையில் சாகுபடி செய்து வருகிறோம். சில இடங்களில் மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story