ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கலெக்டர் ஆய்வு


ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Sep 2021 4:44 PM GMT (Updated: 2021-09-10T22:15:20+05:30)

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கலெக்டர் ஆய்வு.

ஊட்டி,

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் செலவில் வாசகர்கள் அமர்ந்து படிக்க வசதியாக கட்டப்பட்ட கூடுதல் பயிலும் அரங்கு மற்றும் அலுவலக பதிவறை, ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கம்பி வேலி, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மைய வாகன நிறுத்துமிடத்தில் ரூ.16.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட கழிப்பிடம் மற்றும் வளாக மேம்பாட்டு பணி, 

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தவமணி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட பொறியாளர் குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story