கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து துண்டு பிரசுரம்


கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து துண்டு பிரசுரம்
x
தினத்தந்தி 10 Sep 2021 4:57 PM GMT (Updated: 10 Sep 2021 4:57 PM GMT)

தேனி பஸ்நிலைய பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து துண்டு பிரசுரத்தை கலெக்டர் வினியோகம் செய்தார்.

தேனி: 

தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் நகரில் உள்ள கடைவீதிகளில் கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். 

மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலெக்டர் ஆய்வின் போது பலரும் முக கவசம் அணியாமல் வந்தனர். கடைகளிலும் பலர் முக கவசம் அணியாமல் இருந்தனர். முக கவசம் அணியாதவர்களை கலெக்டர் கண்டித்தார். 

கொரோனா விதிமுறைகளை தொடர்ந்து கலெக்டர் கடைப்பிடிக்க அறிவுறுத்தி வந்தபோதும், பொதுமக்கள், வியாபாரிகள் கடைபிடிப்பதில்லை. இதனால், தேனி மாவட்டத்தில் 3-வது அலை பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே, ஆய்வு பணிகளோடு சேர்த்து, அதிரடியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story