கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
தொண்டி,
தொண்டி பேரூராட்சியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 20 இடங்களில் நடைபெறுகிறது.
சின்னத் தொண்டி அங்கன்வாடி மையம், எம்.ஆர்.பட்டினம் பள்ளிக் கூடம், பி.வி.பட்டினம் தர்கா, தொண்டி புதிய பஸ் நிலையம், மகாசக்திபுரம் அங்கன்வாடி மையம், மீனவர் காலனி, ஓடாவி தெரு, அரசு மருத்துவமனை, வெள்ளை மணல் தெரு பள்ளி கட்டிடம், தெற்கு தோப்பு அங்கன்வாடி மையம், மழுங்கு சாகிபு தெரு தர்கா, பெரிய பள்ளிவாசல் தர்கா, அனீஸ் நகர், பெருமானேந்தல் அங்கன்வாடி மையம், எம். ஜி. ஆர். நகர் தர்கா, புது பள்ளிவாசல் தர்கா, புதுப் பள்ளிவாசல் அங்கன் வாடி மையம், முத்துமாரியம்மன் கோவில், சந்தன மாரி யம்மன் கோவில், தெற்கு தெரு அங்கன் வாடி மையம் ஆகிய 20 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story