லாரி மோதி வாலிபர் பலி
லாரி மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் பால் வியாபாரி மாரி என்பவரின் மகன் பால முருகன் (வயது23). படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் டி.ஐ.ஜி. முகாம் அலுவலகம் அருகில் வந்தபோது அந்த பகுதியில் நுகர்பொருள் கிடங்கில் அரிசியை இறக்கி வைத்துவிட்டு சரக்கு லாரி ஒன்று சாலை வளைவில் ஏறி திரும்பியது.
இந்த லாரியை எதிர் பாராமல் மோட்டார் சைக்கிளில் வந்த பாலமுருகன் மீது லாரி மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பால முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த வீரமணி கண்டன் என்பவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story