295 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்


295 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 10 Sep 2021 5:27 PM GMT (Updated: 10 Sep 2021 5:27 PM GMT)

மருத்துவ கல்வி படிப்பதற்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 209 மாணவிகள் உள்பட 295 பேர் எழுதுகின்றனர்.

ராமநாதபுரம், 
மருத்துவ கல்வி படிப்பதற்கான நீட் தேர்வு நாளை  நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 209 மாணவிகள் உள்பட 295 பேர் எழுதுகின்றனர்.
நீட் தேர்வு
மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (12-ந் தேதி) நடைபெறுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட முக்கிய நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. 
இதன்படி இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகள் 83 பேர், 39 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் 103 பேர், 41 மாணவர்கள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 20 பேர், 8 மாணவர்கள் என 206 மாணவிகள், 89 மாணவர்கள் என மொத்தம் 295 பேர் நீட் தேர்வினை எழுதுகின்றனர்.
பயிற்சி 
இதற்கென ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்வித்துறை மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவ- மாணவி களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கொரோனா காலகட்டத்திலும் இணைய வழியில் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த ஆண்டு அதிகமானவர்களை மருத்துவ கல்வியில் சேர்க்க முயற்சி எடுத்துள்ளதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Next Story